தமிழுக்கு உயிர் கொடுத்த வைட் எல்ஸ்ஸின் கல்லறையைப் புதுப்பித்து, விழா எடுத்து கொண்டாடப்படுவது அவசியமானது என்றார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்.தஞ்சாவூர் அருகிலுள்ள , மானாங்கரை ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியில் சோழர் வரலாறு ஆய்வுச் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அருமொழி விருது வழங்கும் விழாவில் பங்கேற்று, அவர் மேலும் பேசியதாவது:
தமிழ் மிகப் பழைமையான மொழி; எந்த மொழியிலிருந்தும் தமிழ் வரவில்லை. அது ஒரு தொன்மையான மொழி என உலகுக்கு முதன்முதலாக அறிந்தவர் வைட் எல்லீஸ் என்ற ஆங்கிலேயர்.
இவர் 1777 முதல் 1819&ஆம் ஆண்டு வரை தான் வாழ்ந்தார். இந்தியாவுக்கு கிழக்கிந்திய கம்பெனி முலம் வந்த இவர், சென்னையில் ஆட்சியராக உயர்ந்தார். அப்போது அவருக்குத் தமிழில் மிகப்பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல், சமஸ்கிருதம், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளையும் கற்றுப் புலமை பெற்றார்.
வடமொழியிலிருந்துதான் அனைத்து இந்திய மொழிளும் வந்ததாக , ஏற்கனவே இருந்த மொழி வல்லுநர்கள் மேற்கண்ட ஆய்வுகள் கூறின. இதை உடைத்து, தமிழ் தென்னிந்திய மொழி என்றும், தென்னிந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் தமிழ் எனவும் முதல் முதலாக 1811&ஆம் ஆண்டில் அறிந்தவர் வைட் எல்லீஸ். இவர்கள்தான் தமிழன் தனித்தன்மையை உலகுக்குத் தெரிவித்தார்.இவருக்குப் பிறகுதான் கால்டு வெல் உள்ளிட்டோர் வந்தனர்
ஆனால் துருதஸ்டவசமாக வைட் எல்லீஸ் ஓலைச்சுவடிகளைத் தேடிக் கொண்டு தென்னகம் வந்தபோது, ராமநாதபுரத்தில் காலமானார். அவரது சமாதி இப்போது ராமநாதபுரத்தில் அரண்மனை அருகிலுள்ள ஆலயத்தில் இருக்கிறது.
தமிழுக்கு முதல் முதலில் பெருமை சேர்ந்த வைட் எல்லீஸை நாம் கௌரவிக்க வேண்டும். தமிழக அரசு அப்பகுதியை தொல்லியல் இடமாக அல்லது பாராட்டுக்குரிய தலமாக அறிவிக்க வேண்டும். தமிழுக்கு உயிர் கொடுத்த எல்லீஸின் சமாதியைப் புதுப்பித்து விழா எடுக்க வேண்டும்.
இப்போது உலகில் பேசப்படுகிற மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழிதான் . இந்தியாவில் அசோகர் காலத்துக் கல்வேட்டுதான் மிகவும் தொன்மையானது எனக் கூறப்படுகிறது. இது வறலாறு ரீதியாக நிருபிக்கப்பட்டாலும் கூட கி.பி. 325&345 ஆம் ஆண்டுக்காலத்தைச் சார்ந்ததே. ஆனால், இவற்றையெல்லாம் முறியடித்துவிட்டு இப்போது கீழடி, கொடுமணல் ஆதிச்சநல்லூர், சிவகளை, அழகன்குளம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். அகழாய்வு தமிழ் முதுமொழி எனப் பறைசாற்றுகின்றன. ஏறத்தாழ 3,000ஆண்டுகள் தொன்மையான நமது தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் இல்லாவிட்டால் நாம் துரோகம் செய்தவர்களாகிவிடுவோம் என்றார் கிருபாகரன்.
தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டக் கண்காணிப்பாளர் டி.அருண்ராஜ் பேசுகையில், வைட் எல்லீஸின் கல்லறையை மத்திய அரசு சார்பில் நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கு முயற்சிமேற்கொள்வோம் என்றார்.
மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ சிறப்புறையாற்றினார் . பின்னர் வரலாறு ,கல்வெட்டு.தொல்லியல் உள்ளிட்டவற்றில் சாதனை படைத்து வரும் 36 பேருக்கு அருமொழி விருது வழங்கப்பட்டது.
அதில் திருச்சி வட்டம் இந்திடியத்தொல்லியல் துறை இயககுநர் முனைவர் த. அருண்ராஜ் அவர்களுககும் அருமொழி விருது வழங்கப்பட்டது.
சங்கத் தலைவர் என்.செல்வராஜ் தலைமையில்நடைபெற்ற இவ்விழாவில் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பு உதவியாளர் எஸ்.சங்கர்,கல்லூரித் தாளாளர் -ஜி.மதன்கோபால்.சங்கச் செயலர் எம்.பி.செந்தில்குமார்.பொருனானர் ஏ.வி.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.


