
ஸ்ரீவைகுண்டம் அருகே பிளஸ் 2 மாணவி ஒருவர், திடீரென காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், கீழ கோடாங்கி தெருவை சேர்ந்தவர் மார்த்தாண்டம். இவரது மகள் லட்சுமி (17). இவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி முதல் இவரை காணவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை.
இதுகுறித்து மார்த்தாண்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.