சாத்தான்குளம் அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பேய்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழைகொட்டியது. இதில் சாத்தான்குளம் அருகே கருங்கடல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. தகவலறிந்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.