மணக்கரை மேலூர் மற்றும் விவசாயபொது மக்கள் பயன்படுத்தும் வாய்க்கால்பாலம் கடந்தசில காலமா உடைந்து பொது மக்கள் செல்ல முடியாமல் கஷ்டபட்டனர்.பல கட்ட போராட்டம் நடத்தியும் அதிகாரிகளை சந்தித்தும் மனு கொடுத்தனர்.எந்த விதமான முயற்ச்சியும் அரசு தரப்பில் செய்யவில்லை. ஆகையால் கோரிக்கை நிறைவேறும் வரைதமிழ்நாடு விவசாயசங்கம் சார்பில் மாவட்டசெயலார் ஆறுமுகம் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்க்கு மாவட்டதலைவர் சீனிவாசன் கருங்குளம் ஒன்றியசெயலாளர். மணி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் கருங்குளம் ஒன்றியசெயலாளர் ராமசந்திரன் நடராஜன் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.நடைபெற்றபோராட்டம் சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் பொது பணிதுறை வருவாய்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை வருகிற 30/10/2021அன்று நடைபெறும் என வட்டாட்சியர் கூறினார்கள். போராட்டத்தை தற்போது 29தேதி வரை ஒத்திவைக்கபட்டது.


