கலிகாலம் .
ஆனால் நாம் கலியோ அல்லது கள்வர்களோ இல்லை. ஏனெனில் தற்போதைய வேகமான உலகத்தில் நாமும் தினமும் ஓடிக் கொண்டிருக்கிறோம், வாழ்வின் மகிழ்வை மறந்து. காலையில் எழுந்திருக்கிறோம், அலுவலகமோ பள்ளிக்கோ கல்லூரிக்கோ கிளம்புகிறோம். இரவு தூங்கும்வரை சமூகவலை தளங்களில் நம்மை தேடுகிறோம், விட்டில் பூச்சிகளாய் மாய்ந்து அந்த தினமும் முடிகிறது.. இதே நிலை ரிப்பீட்டு சனிகிழமை வரை. ஞாயிறு மட்டன், தேட்டர், தூக்கம் என்று அதுவும் தனது அல்ப ஆயுசை முடித்துக்கொள்கிறது.
நம் வாழ்வின் பொருள்தான் என்ன?
நம் வாழ்வின் தேடல்தான் என்ன? பணமா, அதிகாரமா, வீரமா, பெருமையா…. நன்றாக யோசித்துப் பார்த்தால் இறுதியில் அனைவரும் வேண்டுவது அமைதியும், அன்பான உறவுகளுமே.
இதை பணத்தாலோ, அதிகாரத்தாலோ பெற முடியாது புன்னகையாலும், நம் குணத்தாலும் மட்டுமே பெற இயலும்.
நீங்க சொல்வது ஒன்னும் புதிதில்லையே எல்லாம் எங்களுக்கு தெரிந்ததுதானே என்று கூறுபவர்கள் மனதை தொட்டுச் சொல்லுங்கள்? உங்களால் ஆத்மார்த்தமான அமைதி மனப்பூர்வமான மகிழ்வை ஏன் தரவில்லை உங்களது இந்த வழக்கமான வாழ்க்கை?
இறுதியாக நான் சொல்ல வருவது என்னவென்றால் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு மனதிற்கான பயிற்சி தியானம், பிராணயாமா, யோகாசனங்கள் மூலமாக மனதை ஆரோக்கியமாக வைத்தால் மட்டுமே நம் வாழ்வின் தேடல் புரிய வரும்.
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது அந்த ரகசியம் காண்பதே நம் அவசியமானது.
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்.
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்.


