கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
எம்.எஸ்.எம்.ஆர்.எஸ். ரமேஷ் வழிகாட்டுதலின் கீழ், துணைத் தலைவர் எம். செல்வராஜ் விழாவிற்குத் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சங்க உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.கே.இராஜேந்திர பிரசாத், பள்ளிச் செயலாளர் அட்வகேட் ஏ.செல்வம், மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர், ஆர்.கண்ணன் மற்றும் கே.செந்தில் குமார் ஆகியோர் விழாவினை தொடங்கி வைத்தனர்.
மாணவர்கள் ஹர்ஷன், அனிஷா, தீக்ஷித் ஆதி அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் கே.பிரபு சுதந்திர தின உரையாற்றினார். மாணவிகள் வெண்ணிலா, கனிஷ்கா, விழாவினை தொகுத்து வழங்கினர். விழா நிகழ்ச்சிகளை இரு பால் ஆசிரியர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மாணவ மாணவியர்களுக்கு மாறு வேடப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவி ஜெய் ஸ்ரீ அனன்யா நன்றி கூறினார்


