சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட நாளை முன்னிட்டு நாட்டு நலப் பணிதிட்ட நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வைக் கல்லூரி முதல்வர் முனைவர் சின்னத்தாய் முன்னிலை வகித்துச் சிறப்பித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் உமாபாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராகச் சிவந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ரேவதி கலந்து கொண்டு “எங்களுக்காக அல்ல உங்களுக்காக ” என்ற தலைப்பில் பேசினார். வணிகவியல் துறை மாணவி சுசி கலைவாணி நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நாட்டு நலப் பணிதிட்ட அலுவலர்கள் முனைவர் உமாபாரதி ,வளர்மதி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.