தூத்துக்குடி அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாடசாமி (36), டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பல இடங்களில் பெண் பார்க்கும் சரியாக வரன் அமையவில்லையாம்.
திருமணம் தள்ளிப் போகவே மன வேதனை அடைந்த மாடசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.