தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க நேரிட்டதால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காலை 8 மணி முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர். இதனால் நீண்ட வரிசை காணப்பட்டது.
மதியம் 1 மணிக்கு பின்னரும் வெயிலில் காத்திருக்க நேரிட்டதால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நலனுக்காக நிழற்குடை அமைக்க வேண்டும், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


