சித்ரா பவுர்ணமி முன்னிட்டு கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் மலையில் இருந்து வெங்கடாஜலபதி பொன் சப்பரத்தில் கீழே இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் வகுளகிரி மலை மேல் அமைந்துள்ளது வெங்கடாஜலபதி கோவில். இந்த கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதி சந்தன கட்டையில் அருள் பாலிக்கிறார்.
இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமி வருடம் தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து வகுளகிரி மலையில் இருந்து பொன் சப்பரத்தில் கீழே இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக கோவில் முன்பு சிறப்பு தீபாராதனை உடன் வெங்கடாஜலபதி வகுளகிரி மலையில் இருந்து பொன் சத்திரத்தில் எழுந்து இறங்கினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் பொன்சப்பரத்தை தாங்கியபடி கீழே கொண்டு வந்தனர். இந்த விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவது போல் கருங்குளத்தில் தாமிரபரணி ஆற்றில் வெங்கடாசலபதி இரவு இறங்கி மீன் விளையாட்டு விளையாடும் நிகழ்ச்சி நடைபெறும் அதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் வெங்கடாஜலபதி அதே பொன் சத்திரத்தில் பச்சை சாத்தி மலை மேல் எழுதும் நிகழ்ச்சி நடைபெறும்


