செய்துங்கநல்லூரில் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் கிடந்த பொதுக்கழிப்பிடக் கட்டடத்தைச் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார். மேலும், அடிப்படை வசதிகள் இல்லாத சந்தை வளாகத்தைப் பார்வையிட்டார். சந்தைக்கு முன்னால் உள்ள பிரதான சாலையில் (மெயின் ரோட்டில்) பாலத்திற்குப் பின்னால் சாக்கடை மூடப்படாமல் கிடப்பதைக் கண்டு, அதிகாரிகளிடம் கடிந்துகொண்டார்.
சந்தைப் பகுதியில் ஆய்வு செய்ததோடு, நீண்ட நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்த கழிப்பிடத்தைத் திறந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணனை ஊர்மக்கள் பாராட்டினர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டி, தான் எழுதிய “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” என்ற நூலை பரிசளித்தார்.
மேலும், தாமிரபரணி புஷ்கரப் பணிகள் தங்குதடையின்றி நடைபெற, சட்டமன்ற உறுப்பினர் தனது முதல் மாதச் சம்பளமான ₹80,000-ஐ வழங்கியதற்கும் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து தாமிரபரணி பணிகள் தங்குதடையின்றி நடைபெற ஆதரவு தர வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார்.21072026


