ஏரல் லோபா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் லோபா முருகன் விழாவிற்குத் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வெங்கடசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு, காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். ஆசிரியைகள் மெரின், புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் காமராஜரைப் பற்றிய வினாடி-வினா கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் அளித்த மாணவ-மாணவிகளுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாளர் எஸ்தர் மேரி நன்றியுரையாற்றினார். இதற்கான விழா ஏற்பாடுகளை ஏரல் லோபா மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளர் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


