உலக ஆய்வக விலங்குகள் நாள் என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று நினைவுகூரப்படுகிறது. இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான உலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் பலவகையான விலங்குகள் ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றன. இவ்விலங்குகள் மீது உயிர்மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் விலங்குகள் சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.


