வள்ளியூர் மரியா கல்லூரியில் வீரமாமுனிவர் தமிழ் மன்றம் மற்றும் தமிழ்த்துறை இணைந்து நடாத்திய கருத்தரங்கம், மரியா கலையரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்குக் கல்லூரி முதல்வர் சுஷ்மா ஜெனிபர் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ரத்னா ஷீபா மினி முன்னிலை வகித்தார். முனைவர் மேரி குயின் வரவேற்புரையாற்றினார்.
“பொருநை ஆற்றில் புதைந்த ரகசியம்” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உரையாற்றினார். அதன்பின் கல்லூரி மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மணிமொழிச்செல்வன், முனைவர் சுமித்ரா தேவி உட்படப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் முனைவர் மணிமேகலை நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளைக் கல்லூரி நிறுவனர் பொறியாளர் லாரன்ஸ், செயலர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


