ஆறாம்பண்ணையை சொந்த ஊராக கொண்டவர் பீர் முகம்மது. இவர் மதுரையில் பேமஸ் ஜிகிர்தண்டா கம்பேனி நடத்தி வருகிறார் . மேலும் பால் கம்பேனி நடத்தி வருகிறார். இவர் சுமார் இன்று 3600 லிட்டர் பாலை கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, முத்தாலங்குறிச்சி ஆகிய இடங்களில் கொடுதது வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஆறாம்பண்ணை பஞ்சாயதது தலைவர் சேக் அப்துல் காதர் செய்திருந்தார். முத்தாலங்குறிச்சிக்கு வழங்கப்படும் பாலை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம், சேக் அப்துல் காதரின் நண்பர்கள் வழங்கினர். இந்த பால் சமூக சேவகர்கள் மூலமாக மோட்டார் பைக் மூலமாக விட்டிலாபுரம் கொண்டு சென்று அங்கிருந்து உடைப்பட்ட பகுதியில் தலைச்சுமையாக நடந்து சென்று அதன்பிறகு மூன்று கிலோமீட்டர் மற்றொரு பைக் மூலமாக கொண்டு சென்று ஊர் மக்களிடம் வழங்கப்பட்டது .
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், வேம்பு துரை, மணி ஆகியோர் இந்த பாலை ஊர் பொதுமக்களிடம் வழங்கினர். இலவச பால் கொடுத்த மதுரை ஜிர்தண்டா கம்பேனி உரிமையாளர் பீர் முகம்மது மற்றும் ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் உள்பட உழைத்த அனைவருக்கும் முத்தாலங்குறிச்சி கிராம மக்கள் நன்றி கூறினர்.


