செய்துங்கநல்லூர் நூலகத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு செய்தார்.
செய்துங்கநல்லூர் நூலகம் மிகவும் பாரம்பரியம் மிக்கது. இந்த நூலகத்திற்கு கடந்த 50 ஆண்டு காலத்திற்கு முன்பு தோணி என்பவர் குடும்பத்தின் மூலமாக இடம் இனமாக கொடுக்கப்பட்டு, கட்டிடமும் கட்டி கொடுக்கப்பட்டது.
இந்த கட்டிடம் பழுதாகி விடவே 1997 ஆம் ஆண்டு சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மணிநாடார் எம்.எல்.ஏ கட்டிடம் ஒன்றை சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டி கொடுத்தார். ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நூலகத்திற்கு சுற்றப்புறச்சுவர் கட்டி கொடுத்தார். தற்போது 1997 ல் கட்டிட கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே தோணி குடும்பத்தினர் பழைய கட்டிடத்தினை பழுது பார்த்து தர ஒப்புதல் தெரிவித்தனர். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம் வாசகர் வட்டத்தினர் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவரும் ஆவண செய்வதாக வாக்களித்துள்ளார்கள்.
இதற்கிடையில் 4 லட்சத்து 92 ஆயிரம் செலவில் செய்துங்கநல்லூரில் புதியதாக அமைககப்பட்ட மின்மாற்றியை திறந்து வைக்க ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த் ராஜ் வருகை தந்தார். அவர் மின்மாற்றியை திறந்து வைத்து விட்டு அருகில் உள்ள அரசு நூலகத்துக்கு வந்தார். அவரை வாசகர் வட்ட தலைவர் திருமலை, துணை தலைவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நூலகர் லெட்சுமணன், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். அதன் பின் அவர் மரககன்று நட்டார். பின் அவர் நூலகத்துக்குள் சென்று ஆய்வு செய்தார்.
அதன் பின் நடந்த பாராட்டு கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலா£ர் இசக்கிபாண்டியன், காங்கிரஸ் வட்டார செயலாளர் புங்கன், திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு டாகடர் கலீல் ரகுமான், விவசாய சங்க தலைவர் குமார், மூத்த திமுக உறுப்பினர் பட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்துங்கநல்லூர் நூலகத்துககு புதிய கட்டிடம் கட்டிதர ஏற்பாடு செய்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடமும், மாவடட ஆட்சிதலைவரிடம் நூலக கட்டிடம் கட்டி தர பரிந்துரைக்கும் படி எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நூலகத்தினை பழுது பார்த்து தரும் தோணி குடும்பத்தினை சேர்ந்த அப்துல், மின்சார துறையை சேர்ந்த தூத்துககுடி செயற்பொறியாளர் கிராமபுரம் பத்மா, உதவி செயற்பொறியாளர் மின் விநியோகம் சந்திரன், செய்துங்கநல்லூர் உதவி மின்பொறியாளர் மகேஷ்குமார், கருங்குளம் ஆணையாளர் செல்வி ஆகியோர் பாராட்டபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சாத்தான்குளம் சங்கர், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், காங்கிரஸை சேர்ந்த நயினார், சித்திரைபாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


