செய்துங்கநல்லூரில் ஆடு திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரயில்வே தெருவைச் சேர்ந்த மாயாண்டி மகன் சின்னத்துரை (55) என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் கருங்குளம் வன்னியராஜா கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிதுரை (27), வசவப்பபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை மகன் முருகன் (21) மற்றும் கருங்குளம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் இசக்கிமுத்து (36) ஆகிய 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து சின்னதுரை வீட்டிலுள்ள ஆடு ஒன்றை திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
இதுகுறித்து சின்னதுரை அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.9,000/- மதிப்பிலான ஆடும், திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.


