ஸ்ரீ வைகுண்டம் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில் கருங்குளம் யூனியன் பெண்கள் நல அலுவலர் நிர்மலா தேவி விசாரணை மேற்கொண்டதில் கருங்குளம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முகத்துபபாண்டி மகன் சின்னத்தம்பி (21) என்பவர் 15 வயது சிறுமியை 21.10.2021 அன்று குழந்தை திருமணம் செய்தது தெரியவந்தது.
மேலும், இந்த குழந்தை திருமணம் நடைபெறப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களான சந்திரா, அங்கப்பன், சின்னமாரிமுத்து, பெரியமாரிமுத்து, உய்காட்டான் மற்றும் இசக்கி தீரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பெண்கள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா குழந்தைத் திருமணச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சின்னதம்பியை கைது செய்தார்.


