
ஆழிகுடியில் புனித குழந்தை இயேசு தெரசம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அதே போல் இந்தாண்டுக்கான திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக மாலை 7 மணி அளவில் கொடி பவனி நடந்தது. அதன்பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கொடி கம்பத்தில் திருக்கொடி அர்ச்சிக்கப்பட்டு ஏற்றப்பட்டது. கொடியேற்றம் நாட்டார்குளம் பங்குத்தந்தை அம்புரோஸ் மற்றும் சேசுராஜபுரம் முன்னாள் பங்குத் தந்தையும் தூத்துக்குடி மாவட்ட RC பள்ளிகளின் பொறுப்பாளரும் அருட்தந்தை பென்சிகர் தலைமையில் நடந்தது. திருவிழாவின் முக்கிய விழாக்கள் அக்டோபர் 22 முதல் செப்டம்பர் 1 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 9 நாள் திருவிழாவில் சப்பர பவனி நடைபெறும்.10 நாள் திருவிழாவில் கொடியிறக்கம் மற்றும் திருவிழா திருப்பலி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஊர் இறைமக்கள் செய்துள்ளனர்.