தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரத்தில் இயங்கி வரும் ஸ்பிக் நகரின் புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே தூத்துக்குடி மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது. தூத்துக்குடி ஸ்பிக் உரத்தொழிற்சாலை முத்தையாபுரத்தில் 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு உரங்களை வணிகம் செய்வதில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு சமுதாயப்பணிகளை நிறைவேற்றி மக்களின் அடிப்படை தேவைகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரத்தில் இயங்கி வரும் ஸ்பிக் தொழிற்சாலையின் புதிய நுழைவு வாயில் அண்மையில் திறக்கப்பட்டது. இந்த நுழைவு வாயில் அந்த வழியாக செல்லும் அனைவரையும் கவர்ந்துள்ளது.


