தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விளாத்திகுளம் பணிமனை தொமுச செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரிமுத்து அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விளாத்திகுளம் பணிமனை தொமுச செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரிமுத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில், தொ.மு.ச. முன்னாள் செயலாளர் சுப்பையா, தலைவர் சந்திரசேகர், பொருளாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராஜ், கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் கனகரத்தினராஜ், மாரியப்பன், குருசாமி, இளையபெருமாள், செல்வகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


