பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஒவ்வொரு ஜூலை மாதமும் டெங்கு எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார அலுவலர் Dr. பொற்செல்வன் அவர்களின் உத்தரவின்படி இதன் ஒரு பகுதியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அனவரத நல்லூரில் டெங்கு எதிர்ப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கன்னிகா தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமாரவெங்கடேசன் கொசு புழுக்கள் எவ்வாறு உற்பத்தி ஆகின்றது கொசு புழுக்களை அழிக்கும் முறை டெங்கு காய்ச்சல் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் வெங்கடேசன் டெங்கு காய்ச்சலை பற்றி மாணவ மாணவிகள் இடையே எடுத்துரைத்தார்.
இதில் சுகாதார ஆய்வாளர்கள் பாலகண்ணன், நித்திஷ் மற்றும் சார்பின் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இறுதியாக சுகாதார ஆய்வாளர் பாலகண்ணன் நன்றியுரை கூறினார்.


