ஆதிச்சநல்லூர் இந்திய தொல்லியல் துறையும்,ஸ்ரீ வைகுண்டம் கே.ஜி.எஸ் பள்ளி என்.சி.சி மாணவர்கள் இணைந்து நடத்திய தூய்மைத் திட்டத்தின் கீழ் துப்புரவு பணி நடந்தது. இந்த பணிக்கு சைட் பொறுப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். தொல்லியல் ஆய்வாளர் எத்தீஸ்குமார் துவக்கி வைத்தார். மாணவர்கள் எ சைட், பி சைட், சி சைட் ஆகிய மூன்று இடங்களிலும் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்த பணியில் நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், மியூசிய பணியாளர்கள் வெங்கடேஷ், அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


