தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஐந்தாவது புத்தகத் திருவிழா வருகின்ற அக்.3 முதல் 13ஆம் தேதி வரை சங்கரப்பேரி திடலில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் உடன் சென்றனர். –


