சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் புதுக்குளம் ஊராட்சி ஒன்றியமும் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மைப் படுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் சின்னதாய் தூய்மை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். புதுக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் பாலமேனன் ஊராட்சி மன்ற செயலாளர் மணிகண்டன் உடனிருந்தனர். பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்ட வேலையாட்களை வைத்து தூய்மை இந்தியா திட்டம் கல்லூரியில் நிறைவேற்றப்பட்டது.


