செய்துங்கநல்லூரில் தென்சிதம்பரம் என அழைக்கப்படும் சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் திருக்கோவில் திருநடன தரிசன திருவிழா நடந்தது. முதல் நாள் மண்டகப்படி பட்டன் மூப்பனார் குடும்பத்தின் சார்பில் நடந்தது. செங்கோல் மட ஆதினம் அவர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் இந்த நிகழ்வு துவங்கியது. இதில் யாசாலை பூஜைகள் ஆரம்பமானது. சுவாமி திருக்கோவில் உள்பிரகார வீதி உல £ எழுந்தருளல் நடந்தது. இரண்டாம் நாள் பணி நிறைவு காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் அவர்கள் சார்பிலும். மூன்றாம் நாள் மண்டகப்படி செய்துங்கநல்லூர் யோகீசுவரர் சமுதாயம் சார்பிலும், நான்காம் நாள் அய்யனார் குளம் பட்டி சங்கரன் சார்பிலும் நடந்தது. ஐந்தாம் நாள் ரவி சாந்தி அவர்கள் சார்பிலும், ஆறாம் நாள் செய்துங்கநல்லூர் வேல்முருகன் சார்பிலும், ஏழாம் நாள் அய்யனார் குளம் பட்டி சுந்தரம் சார்பிலும், எட்டாம் நாள் வி.கோவில் பத்து பால் துரை சார்பிலும், ஒன்பதாவது நாள் கந்த பிள்ளை, சண்முக சுந்தரம் பிள்ளை அவர்கள் சார்பிலும், பத்தாம் நாள் செய்துங்கநல்லூர் விஜி சார்பிலும், 11 ம் நாள் செய்துங்கநல்லூர் முத்துராமலிங்கம்& வசந்தி சார்பிலும் நடந்தது. தொடர்ந்து 9 நாள்கள் யாகசாலை பூஜைகள் மற்றும் உள்பிரகார வீதி உலா எழுந்தருளல் நடைபெற்றது.
10 ஆம் நாள் அதிகாலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பம் ஆன பின் ஸ்ரீ ருத்திர ஹோமம் நடந்து. 4.30 மணிக்கு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்குத் திரு நடன தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆரூத்ரா தரிசனம் நடந்தது. காலை 8.30 மணிக்கு மேல் காரைக்கால் அம்மையார் மற்றும் மாணிக்க வாசகருக்கு நடராஜ பெருமான் திருநடன காட்சியை அளித்தல் வைபவம் நடைபெற்றது. காலை 10மணிக்குச் சிவகாமி அம்மாள், நடராஜ பெருமாள் திருவீதி உலா வருதல் மாலை 5 மணிக்குக் கட்டளை தாரர் வருவாய்த்துறை அய்யனார் சார்பாக பொன்னூஞ்சல் வைபவ நிகழ்ச்சி நடந்தது.
11ம் நாள் காலை 9மணிக்கு நடராஜர் பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் தீபாராதனை, கருங்குளம் தாமிரபரணி புஷ்கரணியில் சுவாமி புனித நீராடுதல் நடைபெற்றது. மாலை 5 மணிக்குச் சுவாமி உள்பிரகார வீதி எழுந்தருளல், அதன் பின் சேர்க்கை, புஷ்பாஞ்சலி தீபாராதனை கொடிப் பட்டம் நிறைவு பெற்றது. பூஜை ஏற்பாடுகளை சிவஆகம ரத்தினம் வெங்கடாசலம் வாத்தியார், முத்து ராமன் ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் மற்றும் வி.கோவில்பத்து ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரவை , ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


