தூத்துக்குடி மாவட்டத்தின் சமூக செயல்பாட்டு இயக்கம் (தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு) கூட்டம் தூத்துக்குடி கிருஷ்ணராஜ புரத்தில் உள்ள மதர் சமூக சேவை நிறுவன அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளரும்,இர்ஓ தொண்டு நிறுவன இயக்குனரருமான டி ஆர் சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக பிரபஞ்ச அன்பு அறக்கட்டளை இயக்குனர் கே எஸ் ஜாக்சன் அனைவரும் வரவேற்றார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அளவில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான சமூக செயல்பாட்டு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுனாமியின்
கோர தாண்டவம், கொரோனா
போன்ற கொடிய நோய்களின் தாக்குதல் நேரத்திலும்,புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் பாதிப்பு நேரங்களிலும் தொண்டு நிறுவனங்களில் சேவை மிக மகத்தானது என்பதை நாடறியும், தன்னலம் கருதாமல், மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து, தியாக உணர்வோடு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பலர் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு செயலாற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது வேதனை அளிக்கிறது. எனவே அர்ப்பணிப்பு உணர்வோடு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும். சேவைக்காக திடீரென வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வரவேண்டியுள்ளது. அந்நேரங்களில் பொருளாதார வசதி இல்லாமல் சேவையாற்ற செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே தொண்டு நிறுவன பிரதிநிதிகள் எந்நேரமும் வெளியில் சென்றுவர மாநில அரசு இலவச பஸ் பாஸ்சும், மத்திய அரசு ரயில் பாஸ் வழங்க வேண்டும். மேலும் தொண்டு நிறுவனங்களளின் சேவைக்காக அலுவலகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் கட்டுவதற்கு அரசு இடம் (நிலம்) வழங்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வானவில் டிரஸ்ட் இயக்குனர் எம். ஏ. தர்மர், நீம் பவுண்டேசன் இயக்குனர் அ.லூயிஸ் , பேடு தொண்டு நிறுவன பிரதிநிதி ஜி அன்பரசு உட்பட பல்வேறு தொண்டு நிறுவன இயக்குனர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சமூக செயல்பாட்டு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளரும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி மாநில ஒருங்கிணைப்பாளருமன டி ஆர் சந்திரன் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


