தூத்துக்குடியில் உடல் உறுப்பு தானம் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்திய சிறப்பு பொது மருத்துவ சங்கம் விளாத்திகுளம் முத்துநகர் கிளை, தூத்துக்குடி கடலோரம் ரோட்டரி சங்கம் சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வஉசி கல்லூரி முன்பு துவங்கிய பேரணியினை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், ரோட்டரி கிளப் தலைவர், கண்ணன் ராஜகோபால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பேரணியில் மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை முதல்வர், கலைவாணி, துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, ரோட்டரி கிளப் தலைவர் பி.ராஜவேல் முருகன், துணைத் தலைவர் எஸ்.சரவணன் செயலாளர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் வினோத்ராம்குமார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


