திருச்செந்தூர் அருகில் உள்ள ஆறுமுகநேரியில் செயல்பட்டு வரும் புகழ் வாய்ந்த “காயல்பட்டினம்- ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி “ஆண்டு விழா நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராஜர் 1955 ஆம் ஆண்டு தொடங்கி வைத்த பெருமை மிகுந்த பள்ளி இது.
இங்கு படித்த பல முன்னாள் மாணவர்கள் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறார்கள்.
17.08 .2024 அன்று மாலை 3 மணிக்கு பள்ளியில் அமைந்துள்ள ஹாஜி
.வி. எம் .எஸ் .லெப்பை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர், ஆதித்தனார் கல்வி நிறுவன செயலர்,டாக்டர் .எஸ். நாராயண ராஜன் (நெல்லை கவிநேசன்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளி செயலர் திரு. கே. டி .ஜே பிரகாஷ் ,பொருளாளர் திரு வி .கே எம் .பாஸ்கரன், நிர்வாக அலுவலர் திரு .கணேசன், தலைமை ஆசிரியர் திரு. எஸ்.. கண்ணன் ,பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. டி .பாஸ்கர், பள்ளி ஆட்சி குழு உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள் அலுவலர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் என ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
சென்னை தொழிலதிபர் திரு . டி ஜானகிராமன் அவர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பள்ளியில் படிப்பிலும் பிற நிகழ்வுகளிலும் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.


