1831 – கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.
1842 – டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.
1911 – லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
1920 – சேர் ஏ. கனகசபை இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.
1959 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.
1968 – சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.
1969 – ஆஸ்திரேலியனான மைக்கல் டெனிஸ் ரொஹான் என்பவன் ஜெருசலேமின் அல் அக்சா மசூதிக்குத் தீ வைத்தான்.
1983 – பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.
1986 – கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.


