தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்க கூடாது, தாமிரபரணி கரையில் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு செய்திருந்தார். இந்த மனுவின் மீது கடந்த அக்டோபர் மாதம் 12 ந்தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர் . சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அமர்வு தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பின் படி சாக்கடை கலக்காத நதியாக மாற்ற மாநகராட்சி கமிசனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபம் மற்றும் படித்துறையை சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். இதற்கிடையில் இந்த வழக்கு மீது நேற்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.ஆர் . சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் இந்த வழக்கினை விசாரித்தார்கள். ம-னுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி ஆஜர் ஆனார். தாமிரபரணி குறித்த தீர்ப்புக்கான நடவடிக்கை என்ன எடுத்துள்ளார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு சார்பில் ஆஜர் ஆன நீதிபதிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்க்கொண்ட நீதியரசர்கள் இந்த வழக்கை வருகிற 9 ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தொடர்ந்து மதுரை உயர்நீதி மன்றம் தாமிரபரணி ஆற்றின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து விசாரித்து வருவதால் விரைவில் தாமிரபரணி சாக்கடை இல்லாத நதியாக மாறும், மண்டபங்கள் படித்துறைகளை முறையாக சீரமைக்கப்படும் என தாமிரபரணி ஆர்வலர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.


