திருநெல்வேலி டவுண் திருவள்ளுவர் பேரவை சார்பில் நெல்லை டவுண் கூலக்கடை வீதியில் வைத்து தூய தமிழ் பற்றாளர் ஜெயபாலன் எழுதிய சிறார் கவிதை நூல் பூவின் மொழி வெளியிடப்பட்டது. கவிஞர் சிவ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். முனைவர் கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் முருகன் நூலை வெளியிட திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மாணிக்க வாசகம் நூலைபெற்றுக்கொண்டார். பாப்பாக்குடி இரா.செல்வமணி வரவேற்றார். சிறப்பு விருந்தனராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டார். நூலை காந்தி மதி வேலன் அறிமுகம் செய்ய, நூல் திறனாய்வை கவிஞர் சக்தி வேலாயுதமும், மாணவி காயத்ரியும் நடததினர். தமிழ்ச்செம்மல் பாமணி, லயன் ஜவகர்துரை, முனைவர் மகாலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை கவிஞர் பிரபு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஸ்ரீராம் நன்றி கூறினார். நூலாசிரியர் ஜெயபாலன் ஏற்புரை வழங்கினார்.


