தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டார பகுதி வழியாக மணிநகர், பிச்சிவிலை, உடன்குடி, உதிரமாடன் குடியிருப்பு, தாண்டவன் காடு, மாதவன் குறிச்சி, சிறுநாடார் குடியிருப்பு வழியாக கருமேனி ஆற்று நீர் மனப்பாடு கடலில் கலக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் இப்பகுதி வறட்சியில் ஏற்பட்டது. மேலும் ஆற்றில் சீமை கருவேல மரங்கள் முச்சடிகளும் வளர்ந்து உள்ளது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு தண்ணீர் வரும் ஆற்றில் உள்ள பல்வேறு தடுப்புகளை தாண்டி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயம் செழிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து நமது ஆறு நமது கடமை என்ற இலக்குடன் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர்.
அதாவது கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கருமேனியாற்றில் உள்ள சீமை கருவேல மரங்கள் முச்சடிகளை அகற்றி வருகிறார்கள். இந்த பணிகளை சிவனேசன் ராமச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


