தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கீழுரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் மணி(60). கூலி தொழிலாளியான இவர் கடந்த 13ம் தேதி மணக்கரை மாடசாமி கோவில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, அருகில் இருந்த ஒரு வேப்பரத்தின் அடியில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது அங்கு இரண்டு பைக்குகளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் தூங்கி கொண்டிருந்த மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் அதிகமாக வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இக்கொலை சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து மனக்கரையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மணி குடும்பத்தினரை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல் கூறினார்.


