1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.
1894 – சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
1905 – ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
1916 – பிரித்தானியக் கப்பலான HMHS பிரித்தானிக் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
1920 – டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1942 – அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. “ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
1962 – சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
1963 – பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது.
1969 – முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
1969 – ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1971 – வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாஹினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடித்தன.
1974 – பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
1980 – நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
1990 – புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
1990 – மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1996 – புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.


