முறப்பநாடு போலிசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமி காணாமல் போன வழக்கில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, திருநெல்வேலி பொருட்காட்சி திடல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த காணாமல் போன சிறுமியை சில மணி நேரத்திற்குள் மீட்ட தூத்துக்குடி பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா, முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தர்ராஜ், முதல் நிலை காவலர்கள் சதீஷ் தணிகைராஜா மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டி இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் காவலர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தனர்.


