குலசேகரன் பட்டணம் செல்வம் மஹாலில் விஸ்வகர்மா பகவான் உருவம் அலங்காரமாக அமைத்து, யாகம் நடத்தி கொண்டாடப்பட்டது.
ஐந்தொழில் புரியும் கலைஞர்கள் ஐவரை தேர்வு செய்து பரிவட்டம் கட்டி கும்ப மரியாதை செய்து , முத்தாரம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு மண்டபம் வந்தது. தமிழகமெங்குமுள்ள விஸ்வகர்மாகுல சான்றோர்கள் கலந்து கொண்டனர். காயல்பட்டணம் பேச்சிமுத்து பூஜைகளை செய்தார். கவிஞர். ஏரல் ராஜன்,யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை உடன்குடி வானமாமலை பெருமாள் செய்திருந்தார்.


