செய்துங்கநல்லூரில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கர்நாடகாவில் மாணவர்கள் மீது நடந்த தடியடியை கண்டித்தும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய கோரியும் நேற்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாவட்ட செயலாளர் ஹீதாயத்துல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராகளாக மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.முஹம்மது கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.


