தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட தூத்துக்குடி ரயில் முதல் முதலாக காலை 4 மணிக்கு வந்து சேர்ந்தது ரயில் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வந்த பயணிகள் பழையகாயல், முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்க மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் பழைய பஸ் நிலையம் செல்வதற்கும் தனியாக ஒரு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மாநகராட்சி மேயருக்கு மாவட்ட பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.


