தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் கொண்டு சேர்க்கும் வண்ணம் நடைமுறைப்படுத்தப்படும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் 11.07.2024 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்மாதத்தில் இம்முகாம்கள் கீழ்க்கண்டவாறு தினசரி முற்பகல் 09.00 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
1) 22.07.2024 தூத்துக்குடி : சோனா மஹால், தாளமுத்துநகர், பிள்ளையார்கோயில் எதிரில் மாப்பிள்ளையூரணி (வார்டு 5,6,7)
2) 22.07.2024 கருங்குளம் : சமுதாய நலக் கூடம், ஞானபதி கோயில் தெரு, வல்லநாடு வல்லநாடு கலியாவூர் வடவல்லநாடு ஆலந்தா சிங்கத்தாகுறிச்சி
3) 22.07.2024 ஆழ்வார்திருநகரி : பஞ்சாயத்து யூனியன் பள்ளி, பால்குளம் திருக்களுர் தேமான்குளம், கேம்பலாபாத்,கடையனோடை, அழகியமணவாளபுரம் மூக்குப்பீறி, உடையார்குளம், மழவராயநத்தம், ஆதிநாதபுரம், வெள்ளமடம்
4) 23.07.2024 தூத்துக்குடி : சோனா மஹால், தாளமுத்துநகர், பிள்ளையார்கோயில் எதிரில் மாப்பிள்ளையூரணி (வார்டு 8,9,10)
5) 23.07.2024 ஆழ்வார்திருநகரி : காமராஜர் உயர்நிலைப் பள்ளி, நாலுமாவடி அங்கமங்கலம் கச்சனாவிளை நாலுமாவடி புறையூர் குரங்கணி குருக்காட்டுர் ராஜபதி அழகப்பபுரம் சேதுக்குவாய்த்தான்
6) 24.07.2024 தூத்துக்குடி : சோனா மஹால், தாளமுத்துநகர், பிள்ளையார்கோயில் எதிரில் மாப்பிள்ளையூரணி (வார்டு 11,12,13,14)
7) 24.07.2024 திருச்செந்தூh : சமுதாய நலக்கூடம் அம்மன்புரம் அம்மன்புரம் மேலப்புதுக்குடி மூலக்கரை நல்லூர் வீரமாணிக்கம்
8) 24.07.2024 ஸ்ரீவைகுண்டம் : எம்.கே உயர்நிலைப் பள்ளி, பேட்மாநகரம் வேளுர் கஸ்பா வி.ஆதிச்சநல்லூர் தோழப்பன்பண்ணை ஸ்ரீமூலக்கரை பத்மநாபமங்கலம் அனியாபரநல்லூர் திருப்புளியங்குடி
9) 25.07.2024 திருச்செந்தூh : ராமச்சந்திரா ஆதித்தனார் திருமண மண்டபம், காயாமொழி காயாமொழி மேலத்திருச்செந்தூர் பள்ளிப்பத்து பிச்சைவிளை
10) 25.07.2024 உடன்குடி : முத்தாரம்மன் கலையரங்கம் கஸ்பா குதிரைமொழி நயினார்பத்து பரமன்குறிச்சி சீர்காட்சி செம்மறிகுளம் வெள்ளாளன்விளை
11) 25.07.2024 சாத்தான்குளம் : ஆர்.சி நடுநிலைப்பள்ளி, நெடுங்குளம் நெடுங்குளம் கோமனேரி கொம்பன்குளம் அமுதுண்ணாகுடி புதுக்குளம்
12) 26.07.2024 உடன்குடி : ஜெய் திருமண மண்டபம், மெஞ்ஞானபுரம் செட்டியார்பத்து லெட்சுமிபுரம் மாணாடுதண்டுபத்து மெஞ்ஞானபுரம் நங்கைமொழி வெங்கடராமானுஜபுரம்
13) 2607.2024 கோவில்பட்டி : மகிழ்ச்சி அரங்கம், லிங்கம்பட்டி இலுப்பையூரணி குலசேகரபுரம் லிங்கம்பட்டி கடலையூர் வருதம்பட்டி உருளைக்குடி
14) 26.07.2024 சாத்தான்குளம : வு.N.வு.னு.வு.யு மிக்கேல் உயர்நிலைப் பள்ளி, முதலூர் முதலூர் பண்டாரபுரம் சுப்பராயபுரம் தச்சமொழி சாஸ்தாவிநல்லூர்
15) 27.07.2024 சாத்தான்குளம : ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி கலைக் கல்லூரி கொம்மடிகோட்டை அரசூர் தச்ச மொழி நடுவக்குறிச்சி கொம்மடிகோட்டை
16) 27.07.2024 உடன்குடி : முத்தாரம்மன் கோயில் கலையரங்கம் குலசேகரன் பட்டிணம் ஆதியாக்குறிச்சி குலசேகரன் பட்டிணம் மணப்பாடு மாதவன்குறிச்சி சிறுநாடார் குடியிருப்பு
17) 27.07.2024 கோவில்பட்டி : சமுதாய நலக்கூடம் சதுரப்பநாயக்கன்பட்டி சின்னமலைக்குன்று அய்யாக்கோட்டையூர் சிந்தலக்கரை மீனாட்சிபுரம் ஆர். வெங்கடேஸ்வரபுரம்
18) 29.07.2024 சாத்தான்குளம் : அரசு மேல்நிலைப்பள்ளி படுக்கப்பத்து படுக்கப்பத்து திருப்பணி புத்தன்தருவை பள்ளக்குறிச்சி அழகப்பபுரம் பெரியதாழை
19) 29.07.2024 கோவில்பட்டி : கிராம சேவை மையம் நாலாட்டின்புதூர் நாலாட்டின்புதூர் முடுக்குமீண்டான்பட்டி தோனுகால் இடைசெவல் சத்திரப்பட்டி
20) 29.07.2024 கயத்தாறு : சேவை மையம் ஆத்திகுளம் பணிக்கர் குளம் தெற்கு இலந்தை குளம் அய்யனார் ஊத்து வடக்கு இலந்தை குளம் உசிலன்குளம்
21) 30.07.2024 கோவில்பட்டி : சமுதாய நலக்கூடம் இனாம் மணியாச்சி இனாம் மணியாச்சி ஆவல்நத்தம் மூப்பன்பட்டி வில்லிசேரி மந்தி தோப்பு
22) 30.07.2024 கயத்தாறு : சமுதாய நலக்கூடம் அகிலாண்டபுரம் திருமலாபுரம் அகிலாண்டபுரம் ஆசூர் காப்புலிங்கம்பட்டி சவலாப்பேரி கே சிவஞானபுரம்
23) 30.07.2024 ஓட்டப்பிடாரம : ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி புதியம்புத்தூர் புதியம்புத்தூர் இராஜாவின் கோவில் சில்லாநத்தம் சாமிநத்தம் ஜம்புலிங்கபுரம் தெற்கு வீரபாண்டியாபுரம் புதூர் பாண்டியாபுரம்
24) 31.07.2024 கோவில்பட்டி : சமுதாய நலக்கூடம் விஜயாபுரி கொடுக்காம்பாறை சிவந்திபட்டி துறையூர் பாண்டவர் மங்கலம்
25) 31.07.2024 கயத்தாறு : ஆசானக்கூடம் காமநாயக்கன்பட்டி காமநாயக்கன்பட்டி முடுக்கலான்குளம் குருவிநத்தம் கொப்பம்பட்டி தீத்தாம்பட்டி அச்சன்குளம்
26) 31.07.2024 ஓட்டப்பிடாரம : சமுதாய நலக்கூடம் அக்காநாயக்கன்பட்டி கொடியன்குளம் கீழக்கோட்டை கலப்பைபட்டி அக்காநாயக்கன்பட்டி மருதன்வாழ்வு
இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 44 வகையான சேவைகளை பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்.
எனவே தூத்துக்குடி மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி நேரடியாக கோரிக்கைகளைப் பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் நடத்தப்படும் “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்களில் பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


