இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ.2000ஃ-வழங்கும் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக மக்கள்நிலை ஆய்வின் அடிப்படையிலும் (PIP), வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் (BPL) மற்றும் AAY CARD திட்ட பயனாளிகளிடம் இருந்து கூடுதல் விபரங்கள் பெற்று கொள்ளப்பட்டன.
இதுதவிர ஏனைய விடுப்பட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்கள் மற்றும் தகுதியானவர்கள் அனைவரும் விடுபடாமல் பயன் பெறுவதற்கு ஏதுவாக இதற்குரிய புதிய விண்ணப்பத்தினை றறற.வசென.பழஎ.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து அல்லது இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை கிராமப்புற பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் நகர்புறங்களுக்கு பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி விண்ணப்பங்களில் தெரிவித்துள்ளப்படி அனைத்து விவரங்களையும்; பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைத்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பத்தினை 26.02.2019-க்குள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைத்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ள பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப நந்தூரி, தெரிவித்துள்ளார்.