தூத்துக்குடியில் தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் காமராஜ் காய்கனி மார்க்கெட் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திமுக மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மும்தாஜ், கலை இலக்கிய அணி மாநகரச் செயலாளர் ஜீவன் ஜேக்கப், உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏஆர்ஏஎஸ் தனபாலன், நாடார் மகிமை தலைவர் கேபி சீனிவாசன், தட்சணமாற நாடார் சங்க இயக்குநர் லிங்க செல்வன், முன்னாள் இயக்குநர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 12ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ் வார்டு தலைவர்கள் முருகேசன், பிரேம்நாத், சேவியர் மிஷ்யர்,வழக்கறிஞர் செல்வம், பாலகிருஷ்ணன், ஜான் வெஸ்லி,வாசி ராஜன், மாரியப்பன், ஜோக்கின்ஸ், ஐஎன்டியூசி முத்து, ரமேஷ், சாரதி, கிரிதரன், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனதா தளம்
தூத்துக்குடி மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சொக்கலிங்கம் தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர் கோமதிநாயகம், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேந்திர பூபதி, மாநகர துணை செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


