குவாத்தமாலா எனும் நாடு நமது வெப்சைட் muthalankurichikamaraj.com (முத்தாலங்குறிச்சி காமராஜ்.காம்) ல் 134 வது நாடாக இணைந்துள்ளது. இணைந்த நாட்டில் இருந்து நமது வெப்சைட்டை பார்வையிட்ட பார்வையாளருக்கு நன்றி. இதுவரை நமது வெப்சைட்டை 5 லட்சத்து 700 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய வெப்சைட்டில் என்னுடைய புத்தகத்தினை பதிவு செய்துள்ளேன்.அமேசான் கிண்டிலிலும் எனது நூல் கிடைக்கிறது. வாங்கி படியுங்கள்.
இனி குவாத்தமாலா குறித்த வரலாறு வருமாறு.
குவாத்தமாலா குடியரசு நடு அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கிலும் மேற்கிலும் மெக்சிக்கோவும், வடகிழக்கே பெலீசு மற்றும் கரிபியக் கடலும், கிழக்கில் ஒந்துராசும், தென்கிழக்கில் எல் சால்வடோரும், தெற்கில் அமைதிப் பெருங்கடலும் அமைந்துள்ளன. ஏறத்தாழ 17.6 மில்லியன் மக்கள்தொகை மதிப்பீட்டைக் கொண்டுள்ள இந்த நாடு நடு அமெரிக்காவிலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்குகின்றது. குவாத்தமாலா ஒரு சார்பாண்மை மக்களாட்சி அமைப்பைக் கொண்டது. இதன் தலைநகரமாகவும் மிகப்பெரும் நகரமாகவும் நுயேவா குவாத்தமாலா டெ லா அசுன்சியான் எனப்படும் குவாத்தமாலா நகரம் விளங்குகின்றது.
தற்போதைய குவாத்தமாலாவின் ஆட்பரப்பு இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் பரவியிருந்த முந்தைய மாயா நாகரிகத்தின் மையப்பகுதியாக இருந்தது. இந்நாட்டின் பெரும்பகுதியும் 16ஆம் நூற்றாண்டில் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்டது. புதிய எசுப்பானியா என அமைக்கப்பட்ட அரசு சார்பாளுமையின் அங்கமாயிருந்தது. 1821இல் நடு அமெரிக்க கூட்டரசு அமைக்கப்பட்டபோது அதன் அங்கமாக விடுதலை பெற்றது. இந்த கூட்டரசு 1841இல் கலைக்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் நடு, பிற்பகுதிகளில் குவாத்தமாலா தொடர்ந்த நிலையின்மையையும் உள்நாட்டுப் போர்களையும் எதிர்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு அரசும் ஐக்கிய பழ நிறுவனமும் ஆதரவளித்த வல்லாண்மையாளர்களால் ஆளப்பட்டது. 1944 இல் கொடுங்கோலன் ஜார்ஜ் உபிக்கோவை மக்களாட்சியை ஆதரித்த இராணுவம் கவிழ்த்தது. தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு குவாத்தமாலா புரட்சி வெடித்தது. இந்த புரட்சிகளால் பல சமூக பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. 1954 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவு பெற்ற படைக்குழு ஆட்சியை கைப்பற்றியது.
1960 முதல் 1996 வரை, குவாத்தமாலாவில் அமெரிக்க அரசு ஆதரவுடைய அரசுக்கும் இடதுசாரி அரசியல் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர்கள் நடந்துவந்தன. இக்காலகட்டத்தில் மாயா நாகரிகத்தினரின் இனவழிப்பையும் இராணுவ ஆட்சி நடத்தியது. ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கிய அமைதி உடன்பாட்டிற்குப் பிறகு, குவாத்தமாலா பொருளியல் முன்னேற்றத்தையும் தொடர்ந்த மக்களாட்சித் தேர்தல்களையும் சந்தித்தது. இருப்பினும் தொடர்ந்து மிகுந்த ஏழ்மை வீதம், குற்றங்கள், போதைமருந்து வணிகம், நிலையின்மையை எதிர்கொண்டு வருகின்றது. 2014 நிலவரப்படி குவாத்தமாலா மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் 33 இலத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளில் 31ஆம் இடத்தில் உள்ளது.
1996 இலிருந்து இந்நாடு ஏறத்தாழ நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும், குவாத்தமாலாவின் அண்மைக்கால உள்நாட்டுக் குழப்பங்களும் இராணுவப் புரட்சிகளும் நாட்டின் வளர்ச்சி வீதம் குறைந்து வந்திருக்கிறது. குவாத்தமாலாவின் பெரும்பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமலே உள்ளன.


