தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு தருவைகுளம் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிலுவை பாதை நடைபெற்றது. சிறுவர்கள் இயேசுவை சிலுவையில் அறைவது போன்று நடித்துக் காட்டினர். திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, ஊர் நிர்வாகிகள், அருட் சகோதரிகள் மற்றும் அனைத்து சபை மக்கள் செய்திருந்தனர்.


