தூத்துக்குடி ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் காந்திகிராமம் லட்சுமி சேவா சங்கம் ஆகியவை சார்பில் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடியில் நடந்த மருத்துவ முகாமிற்கு ஸ்பிக்நகர் ரோட்டரிசங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஸ்பிக் நிறுவன நிர்வாக மேலாளர் ஜெயப்பிரகாஷ், ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலர் ராமசுப்பு அனைவரையும் வரவேற்றார். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாமினை செந்தில் நாயகம் துவக்கி வைத்தார். இதில், தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ரோட்டரி சங்க பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.


