கொங்கராயகுறிச்சி வீரபாண்டிஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது இந்த கோயிலில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் மண்ணுக்குள் மூழ்கியிருந்தது. தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கி இருந்த இந்த கோயிலைப் பக்தர்கள் தோண்டி எடுத்துப் பராமரித்து வருகிறார்கள். தற்போது திருப்பணிகள் எல்லாம் நடந்து கும்பாபிஷேகத்திற்குத் தயாராக உள்ளது. இதற்கிடையில் இந்த கோயிலில் பிரதோஷம் , அஷ்டமி பூஜை மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இன்று சனிக்கிழமை பிரதோஷம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொன்னுருதி அம்மாள் சமேத வீரபாண்டி ஸ்வரர் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நந்தி, பைரவருக்குப் பூஜை நடந்தது. இந்த பிரதோஷத்தின் போது இக்கோயிலைச் சுற்றி சப்பர பவனி நடந்தது . சுமார் 100 வருடங்களுக்கு முன்னால் இந்த பவனி நடந்ததாகவும் அதைப் பார்த்தவர்கள் தற்போது யாரும் இல்லை என்றும் இந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். சுமார் 100 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த சப்பர பவனியில் மக்கள் கலந்துகொண்டு கோயிலைச் சுற்றி சப்பரத்தைக் கொண்டுவந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்


