சாத்தான்குளத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் விவசாயிகளுக்கு எவ்வாறு மகசூலைப் பெருக்கலாம், செலவினங்களை எவ்வாறு குறைக்கலாம், என்பது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களுக்கு தேவையான ஆலோசனை பெற்றுக் கொண்டனர்.


