கராத்தே பட்டய தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
நாசரேத்தில் கரோத்தே பட்டய தேர்ச்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் கராத்தே பட்டய தேர்ச்சி போட்டி நடைபெற்றது. கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை வகித்து பயிற்சிகளை அளித்தார். நிகழ்ச்சியில் நாசரேத் காவல் துறை உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி கராத்தே பட்டயமும் சான்றிதழ்களும் வழங்கினார். போட்டிக்கான எற்பாடுகளை குமாரநாயகன் செய்திருந்தனர்.


