துாத்துக்குடி ஸ்பிக் நகர் இன்னர்வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
துாத்துக்குடி ஸ்பிக் நகர் இன்னர்வீல் கிளப் புதிய தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. துாத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா தலைமை வகித்தார். வெயிலா கே. ராஜா முன்னிலை வகித்தார். ஆரா சில்க் பொட்டி நிர்வாகி செல்வி புதிய தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
இன்னர்வீல் கிளப் துணைத்தலைவர் ஜூடி, செயலாளர் மீனாகுமாரி, பொருளாளர் கெளசல்யா, சிதம்பர செல்வி மற்றும் டாக்டர் ஆரத்தி, முன்னாள் தலைவர் புனிதவள்ளி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள், கல்வி சீருடைகள், பாடப்புத்தகம், பெண்களுக்கு சுய வேலை வாய்ப்புக்கு மாடுகள், கன்று குட்டிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா பயனாளிகளுக்கு வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், கல்விக்கு வயது தடை கிடையாது. எந்த வயதிலும் பெண்கள் கல்வி கற்கலாம். கல்வி ஒன்று தான் அழியாத செல்வமாக நமக்கு வாழ்க்கைக்கு பக்கபலமாக இருக்கும்.
அனைத்து பெண்களும் கல்வி கற்க வேண்டும். பெண் கல்விக்கும், வேலைவாய்புக்கும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதனை நாம் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும், யாராக இருந்தாலும் நம்பிக்கையோடு முழு முயற்சி செய்து கடின உழைப்பு செய்தால் எதிலும் சாதிக்க முடியும் என்றார்.


