கால்பந்து போட்டிகளுக்கு தேசிய நடுவராக துாத்துக்குடியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.குவாலியரில் ஆல் இண்டியா புட்பால் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான தேர்வுகள் பிட்னஸ் மற்றும் தியரி என்று இரண்டு பிரிவுகளாக நடந்தது. இதில் அகில இந்திய அளவில் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் கர்நாடாக ஸ்டேட் புட்பால் பெடரேஷன் சார்பில் துாத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்த பகவத்சுந்தர்ஜீ இரண்டு தேர்விலும் வெற்றிபெற்று தேசிய நடுவராக தேர்ச்சிபெற்றார். பகவத்சுந்தர்ஜீயின் தந்தை சிவசுப்பிரமணியன் ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.


